புனித அந்தோணியாரின் துறவற வாழ்க்கை
புனித அந்தோணியாரின் துறவற வாழ்க்கை
அந்தோணியார் தன்னுடைய 15 ஆம் வயதில் ஆகுஸ்தினார் சபையில் சேர ஆவல் கொண்டார். 1210 ஆம் வருடம் ஆகுஸ்தினார் சபையில் சேர்ந்தார். அவர் சபையில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் அவருடைய நண்பர்கள் அவரை அடிகடி அவரை சந்தித்தனர். இதை அவர் விரும்பாததால் தன்னை coimbra நகரில் உள்ள ஹோலி கிராஸ் மடத்துக்கு மாற்ற கேட்டு கொண்டார்.
அங்கே அவர் எட்டு வருடங்கள் இறையியல் படித்தார். பின்பு அவர் 1219இல் குருப்பட்டம் பெற்றார். ஒரு நாள் சில துறவிகளை அவர் மடத்தில் கண்டார். அவர்களிடம் அவர்கள் யார்? எங்கே இருந்து வருகிறார்கள்? என்று வினவினார்.
அப்போது நாங்கள் ஒரு பிரான்சிஸ்கன் சபை துறவிகள் என்றும், ஆப்ரிக்காவில் உள்ள மோர்ரகோ என்னும் நாட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்று சர்வேசுரனை பற்றி அந்த நாட்டு மக்களுக்கு போதிக்கவும், சில நேரத்தில் வேதசாட்சி மரணம் அடையலாம் என்றும் அந்தோணியாரிடம் சொன்னார்கள். இதை கேட்ட அவர் தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடைய ஆசை கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக