அந்தோணியாரின் புதுமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை

St.Antony's food poison miracle -st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles, anthoniyar church in tirunelveli.

அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். 

அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர்.  அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள்  யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"
அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் வறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.

தேவ நற்கருணையை கழுதை வணங்கும் புதுமை

1 கருத்து
தேவ நற்கருணையை கழுதை வணங்கும் புதுமை 

St. Antony's miracle - Anthoniyar church koripallam , st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles

ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது.  அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு  முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

புனித அந்தோணியார் போதிப்பதை மீன்கள் கேட்கும் புதுமை

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் போதிப்பதை மீன்கள் கேட்கும் புதுமை

 Anthoniyar church koripallam , st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles

அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார். 

அங்கே   ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர்.  எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை. 


அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.  


அந்தோணியார்  கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை  கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக  நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு  கொண்டு இருந்தன. பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.

புனித அந்தோணியார் குருவின் அனுமதி பெற்று செய்த புதுமை

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் குருவின் அனுமதி பெற்று செய்த புதுமை

 Anthoniyar church koripallam , st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles

அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே  இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே  இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.

புனித அந்தோணியார் சிறுவயதில் நிகழ்த்திய புதுமை

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் தன்னுடைய சிறுவயதில் நிகழ்த்திய புதுமை.

anthoniyar small age miracle -  Anthoniyar church koripallam , st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles


அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் பூசை செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை  எல்லாம்

அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காண வில்லை. தந்தைக்கு கோபம். ஆனால்  அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.

புனித அந்தோணியார் செய்த புதுமை நிகழ்வுகள்

2 கருத்துகள்
அந்தோணியார் நிகழ்த்திய புதுமை நிகழ்வுகள்

anthoniyaar wonderful world ,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

  • ஒருமுறை அந்தோணியார்  ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். 
  • இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
  • மற்றுமொறு புதுமை, அந்தோணியார் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.