அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை
புனித அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை
அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார்.
அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள் யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"
அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் வறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக