இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு !!
இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு !!
இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன.
இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர்.
அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் இதனை அங்கிருந்த கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொண்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கல்வெட்டுகளை கி.பி 670 யில் De Locus Sanctis என்ற நபர் எழுதியதாகவும், இதன் மூலம் இயேசு கிறிஸ்து அந்த வீட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக