புனித அந்தோணியாரின் கையில் இருக்கும் குழந்தை இயேசு

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியாரின் கையில் இருக்கும் குழந்தை இயேசு

anthoniyaar with child Jesus - anthoniyaar church koripallam ,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியாரின் இறுதி நாட்கள்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியாரின் இறுதி நாட்கள் .

anthoniyaar last minute life, Anthoniyar church koripallam , st. antony's church, st. antony's church koripallam, anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles


அந்தோணியார் பதுவா  நகருக்கு  போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். 

தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார்.ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella  என்னும் ஊரிலே தனது 35 வயதில்  இறந்தார். 

அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதை அப்போது போப் ஆகா இருந்த Gregory IX  அந்தோணியாருக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்..



1263 ஆம் ஆண்டு அவரது கல்லறையில் இருந்து அவரது புனித பண்டங்களை எடுப்பதற்காக கல்லறையை திறந்தனர். 

என்ன ஆச்சரியம் அவரது உடல் எல்லாம் அழிந்து போயிற்று. ஆனால்  அவரது நா மட்டும் அழியாமல் அப்பிடியே இருந்தது. 

அவர் இறந்தது 1231. இன்றும் சர்வேசுரனை பற்றி மக்களுக்கு போதித்த அவரது நா அழியாமல் பதுவா  நகரிலே அவரது ஆலயத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியார் செய்த புதுமை நிகழ்வுகள்

2 கருத்துகள்
அந்தோணியார் நிகழ்த்திய புதுமை நிகழ்வுகள்

anthoniyaar wonderful world ,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

  • ஒருமுறை அந்தோணியார்  ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். 
  • இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
  • மற்றுமொறு புதுமை, அந்தோணியார் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

2 கருத்துகள் :

கருத்துரையிடுக

புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல் 

புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல் -st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோணியார் மடத்தின் பெயரால் அந்தோணி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். 

சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். 

அன்றுமுதல் அந்தோணியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோணியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியார் அகுஸ்தீன் சபையில் சேர்த்தல்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் அகுஸ்தீன் சபையில் சேர்த்தல் 

புனித அந்தோணியார் அகுஸ்தீன் சபையில் சேர்த்தல் -st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

அந்தோணியார் ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த அந்தோணியார்  தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் திருஉருவம் , பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த அந்தோணியார்  தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியாரின் துறவற வாழ்க்கை

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியாரின் துறவற வாழ்க்கை

anthoniyaar world ,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,


அந்தோணியார் தன்னுடைய 15 ஆம் வயதில் ஆகுஸ்தினார் சபையில் சேர ஆவல் கொண்டார். 1210 ஆம் வருடம் ஆகுஸ்தினார் சபையில் சேர்ந்தார். அவர் சபையில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் அவருடைய நண்பர்கள் அவரை அடிகடி அவரை சந்தித்தனர். இதை அவர் விரும்பாததால் தன்னை coimbra நகரில் உள்ள  ஹோலி கிராஸ் மடத்துக்கு மாற்ற கேட்டு கொண்டார்.


அங்கே அவர் எட்டு வருடங்கள் இறையியல் படித்தார். பின்பு அவர் 1219இல்  குருப்பட்டம் பெற்றார். ஒரு நாள் சில துறவிகளை அவர் மடத்தில் கண்டார். அவர்களிடம் அவர்கள் யார்? எங்கே இருந்து வருகிறார்கள்? என்று வினவினார். 

அப்போது நாங்கள் ஒரு பிரான்சிஸ்கன் சபை துறவிகள் என்றும், ஆப்ரிக்காவில் உள்ள மோர்ரகோ என்னும் நாட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்று சர்வேசுரனை பற்றி அந்த நாட்டு மக்களுக்கு போதிக்கவும், சில நேரத்தில் வேதசாட்சி மரணம் அடையலாம் என்றும் அந்தோணியாரிடம் சொன்னார்கள். இதை கேட்ட அவர் தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடைய ஆசை கொண்டார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியாரின் இளமை பருவம்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியாரின் இளமை கால பருவ குறிப்பு

youth life of punitha anthoniyaar,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,


அந்தோணியார் போர்த்துகல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்னும் ஊரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார்.


அந்தோணியாரின் பெற்றோர் அவரை ஒரு கத்தோலிக்க பள்ளியில் படிக்க வைத்தனர். அவருடைய ஆசிரியர்கள் அவர் ஒரு வீரனாக வருவார் என்றனர். 

ஆனால்  அவர் தந்தையோ அதனை மறுத்தார். அவருடைய தந்தைக்கோ அவர் ஒரு நல்ல நீதிமானாக வரவேண்டும் என்பதுதான் ஆசை. 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புனித அந்தோணியாரின் வாழ்க்கை வரலாறு

3 கருத்துகள்
புனித அந்தோணியாரின் வாழ்க்கை வரலாற்றை சிறிய சிறிய பாகங்களாக பிரித்து இங்கு பகிர்ந்துள்ளேன் .

புனித அந்தோணியாரின் வாழ்க்கை வரலாறு.

anthoniyar history of life ,st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

இயற்பெயர்                  : பெர்தினாந்து  

பிறப்பு                             :  1195

ஆகுஸ்தினார் சபை  : 1210 

பிரான்சிஸ்கன் சபை: 1220
           
இறப்பு                             :  13.ஜூன் 1231

புனிதர் பட்டம்               : 1232

பதுவை நகர அந்தோனியார் (அல்லது) லிஸ்பன் நகரஅந்தோனியார் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.


3 கருத்துகள் :

கருத்துரையிடுக

புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியாரின் புகழை உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் .. அந்தோணியார் இளைஞர் அணி , கோரிப்பள்ளம் சார்பில் உருவாக்கப்பட்ட இணையதளம். 

anthoniyaar church koripallam

அந்தோணியாரின் புகழை பரவ செய்யும் முகநூல் பக்கம் :

Www.facebook.com/anthoniyaarchurchkoripallam

அந்தோணியாரின் புகழை பரவ செய்ய அனைவரும் முகநூல் பக்கத்தை லைக் செய்து பிறருடன் பகிரவும் 

In English :

St. Antony's Church, Koripallam is one of the simplest and beautiful church in tirunelveli area.

Every night prayer services are conducted and mass is being offered on Tuesdays at 7 pm.

One of the main important function of St. Antony's Feast will be celebrated each and every year for 10 days on May month.

To spread the St. Antony's reputation to all  around the world. Antony's love and blessings to all of you..

Our church page :

www.facebook.com/anthoniyaarchurchkoripallam

Our Church Website :

www.anthoniyaarchurch.blogspot.com

Address :

St. Antony's Church,
        koripallam,
Tirunelveli - 627002

Google Search Tags Of Our St. Antony's Church Koripallam

st. antony's church, st. antony's church koripallam,anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles, anthoniyar church in tirunelveli

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக